இலவச திட்டங்கள்.. கர்நாடக தேர்தலில் இரட்டை வேடம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின்.!

இலவச திட்டங்களால் குறித்து இழிவாக பேசியவர்கள், தற்போது கர்நாடக தேர்தலில் வழங்கியுள்ள வாக்குறுதிகளால் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மே 7, 2021இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, திமுக தொண்டர்களுக்கு முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பல்வேறு வலியுறுத்தல்களையும், அறிவுறுத்தல்களையும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
முக்கியமாக, திராவிட மாடல் ஆட்சி சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடும் கட்சியினர் அளித்துள்ள வாக்குறுதிகளை பார்க்கும் போது தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி தான் இந்தியாவின் அனைத்து மாநில நிர்வாகத்தின் பார்முலாவாக உள்ளது என்பது உறுதியாகியுள்ளது என கூறியுள்ளார்.
சமூக நலத்திற்காகவும், மக்கள் நல மேம்பாட்டிற்காகவும் அறிவிக்கப்பட்ட திராவிட மாடல் அரசின் பல திட்டங்களை இலவசங்கள் என்றும், இலவச திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதகவும் இழிவாக பேசியவர்கள், கர்நாடக தேர்தலில் அளித்திருக்கும் இலவச வாக்குறுதிகளால் அவர்கள் இரட்டைவேடம் போடுவது வெளிவந்துள்ளது.
நமது திராவிட மாடல் ஆட்சியே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் ஆட்சி பார்முலா என்பது உறுதியாகியுள்ளது என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இரண்டாண்டு சாதனைகளை மக்களின் இதயங்களில் பதித்திடுவோம்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
விவரம்: https://t.co/2Czf85JaKk pic.twitter.com/ZxnTyIzM12
— DMK (@arivalayam) May 4, 2023