ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகளில் ஜனவரி 2, 3 தேதிகளில் நேரில் பங்கேற்கலாம்.
ஆரோக்கியமான, ஆனந்தமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளது. ஈஷா யோகா மையத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் இவ்வகுப்பை நேரில் நடத்த உள்ளனர்.
இவ்வகுப்பில் ‘சூர்ய சக்தி’ என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இதயத்தை பலப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக்கலாம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
இந்த சூர்ய சக்தி பயிற்சி குறித்து சத்குரு கூறும் போது, “உங்களுக்குள் உள்ள சூரியனை நீங்கள் தூண்டினால், உங்கள் உடல் ஒளி வீசி பிரகாசிக்க துவங்கும்” என கூறியுள்ளார்.
இவ்வகுப்புகள் ஜனவரி 2 மற்றும் 3 தேதிகளில் காலை 6.30 மணி – காலை 8.15 மணி, நண்பகல் 11.30 மணி – 1.15 மணி, மாலை 5.30 மணி – 7.15 மணி என 3 நேரங்களில் நடக்கும். இதில் ஏதேனும் ஒரு நாள் ஒரு நேரத்தை பங்கேற்பாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும் இப்பயிற்சியில் 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். யோகா செய்த முன் அனுபவம் எதுவும் தேவை இல்லை. உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் நடக்கும் இவ்வகுப்பில் பங்கேற்க Isha.co/SSRD என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவுக்கு உதவி தேவைப்பட்டால் 83000 99555 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…