சிவநேசன் என்பவர் வாங்கிய தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் கிடந்த தவளை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்த சிவநேசன் என்பவர், நேற்று மாலை பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் ஆவின் பாலத்திற்கு சென்று பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது .
இதனையடுத்து, சிவனேசன் ஆவின் பால் முகவர் பாஸ்கரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பாஸ்கரன் விழுப்புரம் மண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரனிடம் தகவல் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஐயங்கரன் சிவனேசன் என்பவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் தவளை கிடந்தது, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…