ஜி-20 பேரிடர் பாதுகாப்பு மீட்பு மாநாடு; சென்னையில் இன்று முதல் 3 நாட்கள்.!

G20Chennai Session

ஜி-20 பேரிடர் பாதுகாப்பு மாநாடு இன்று சென்னையில் தொடங்கியது.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து நடத்தும் ஜி-20 உச்சிமாநாட்டின் இந்த வருடத்திற்கான தலைமை இந்தியா ஏற்றபிறகு, அதன் பல்வேறு துறைகளின் முக்கிய கூட்டங்கள் இந்தியா முழுதும் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி பேரிடர் பாதுகாப்பு மற்றும் மீட்பு தொடர்பான கூட்டம், சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் கமல் கிஷோர் கூறும்போது, இதன் முதல் இரு கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இறுதிக்கட்ட கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. பேரிடர் கால முன்னெச்சரிக்கை, நிதி ஒதுக்கீடு, பேரிடர் பாதுகாப்புக்கான கட்டமைப்பு, பேரிடர் மீட்பு, சுற்றுசூழல் மேம்பாடு குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்