விதிமுறை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மனி மாணவர் இந்திய பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
  • அதில் சென்னை ஐஐடி-யில் பயின்ற ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் மாணவன் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல்வாதிகள்  சார்பாக போராட்டகள் நடந்து வருகிறது. அதில் சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் என்ற மாணவன் சென்னை ஐஐடி-யில் இயற்பியல் முதுகலை பட்டம் பயின்று வந்தார். கடந்த நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் பங்குபெற்று அவரது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் ஜேக்கப் மாணவனை இந்தியாவில் தங்கி படிப்பதற்கான தகுதியை ரத்து செய்தனர்.

இந்நிலையில் ஐஐடி-யில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவனை ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார் என தெரிய வந்தது. இதுகுறித்து தி பெட்ரலுக்கு தொடர்புகொண்ட ஜேக்கப், குடியுரிமை அதிகாரிகள் என்னை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் ஏன் போராட்டத்தில் கலந்துகொண்டிங்க என கேள்வி கேட்டனர். அப்போதான் தெரிந்தது நான் கடுமையான விசாரணை வளையத்துக்குள் சிக்கிக்கொண்டேன் என, புரிந்து கொண்டார். பின்னர், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டம் சரியான அனுமதியின்றி நடத்தப்பட்டதா என தெரிவித்தனர். மேலும், மாணவர் விசாவில் வந்துருக்கும் நீங்கள் படிக்க மட்டுமே அனுமதி, போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டனர்.

பின்னர் இந்த போராட்டம் அனுமதியின்றி  நடத்தப்பட்டது என எனக்கு அப்போதுதான் தெரியும், மாணவர் விசாவில் வந்த நான் படிப்பில் மட்டும் கவனம் செலுத்திருக்க வேண்டும். வேறு எந்தவொரு நடவெடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்க கூடாது என நான் புரிந்துகொண்டேன். பிறகு நீண்ட நேரம் பேசிய அதிகாரிகள் என்னை இந்தியாவை விட்டு வெளியேற சொன்னார்கள். நான் என் மன்னிப்பையும், என்னோடைய வருத்தத்தையும் தெரிவித்தேன். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்தனர் என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு செமஸ்டர் மட்டும் இந்தியாவில் படித்த ஜேக்கப், மீதியுள்ள  படிப்பை அவரது நாட்டில் தொடருவார் என தெரிகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

4 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago