சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சென்னை ஐஐடி-யில் பயின்ற ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் மாணவன் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல்வாதிகள் சார்பாக போராட்டகள் நடந்து வருகிறது. அதில் சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் என்ற மாணவன் சென்னை ஐஐடி-யில் இயற்பியல் முதுகலை பட்டம் பயின்று வந்தார். […]