சாத்தான்குளத்தில் அருகே 8 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நேற்று முன்தினம் மதியம், வடலிவினை இசக்கியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள சிறிய பாலத்தின் அடியில் முத்தார் என்ற அந்த 8 வயது சிறுமி, தண்ணீர் பிடிக்கும் ட்ரம்மில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தூத்துக்குடி, மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் மற்றும் நிதிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என சாத்தான்குளம் சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பேட்டியளித்தார். இந்நிலையில் சிறுமியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட முத்தீஸ்வரன் ஒப்புக் கொண்டுள்ளதாக எஸ்பி கூறினார்.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…