குட்நியூஸ்…ரூ.61.70 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ள பள்ளிகள் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Published by
Edison

சென்னை:மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் ரூ.61.70 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பி கூறப்பட்டுள்ளதாவது:

“2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவையில் திருத்திய நிதிநிலை அறிக்கையின் விவாதத்தின் போது மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள்,சென்னைப் பள்ளிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்கள்.

அதனடிப்படையில், 8 சென்னைப் பள்ளிகளில் ரூ.21.77 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

  • சென்னை ஆரம்பப் பள்ளி, கோட்டூர்;சென்னை உயர்நிலைப்பள்ளி, கோட்டூர் – ரூ.6 கோடி மதிப்பில்.
  • சென்னை ஆரம்பப் பள்ளி, கம்தார் நகர்;சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் – ரூ.5.08 கோடி மதிப்பில்
  • சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புல்லா அவென்யூ – ரூ.3.86 கோடி மதிப்பில்.
  • சென்னை மேல்நிலைப்பள்ளி.எம்.ஜி.ஆர்.நகர் – ரூ.1.78 கோடி மதிப்பில்.
  • சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பந்தர் கார்டன் -ரூ.4.00 கோடி மதிப்பில்.
  • சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மார்க்கெட் தெரு – ரூ.1.05 கோடி மதிப்பில் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே,6 சென்னைப் பள்ளிகளில் ரூ.17.38 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கான ஒப்பம் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி,

  • சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மார்க்கெட் தெரு – ரூ.6.19 கோடி.
  • சென்னை ஆரம்பப்பள்ளி, புதிய மார்க்கெட் பகுதி;சென்னை உயர்நிலைப்பள்ளி,புதிய மார்க்கெட் பகுதி – ரூ.5.13 கோடி.
  • சென்னை ஆரம்பப்பள்ளி;சென்னை மேல்நிலைப்பள்ளி,சுப்பராயன் தெரு – ரூ.4 கோடி.
  • சென்னை நடுநிலைப்பள்ளி, காந்திகிராமம் – ரூ.2.06 கோடி.

மேலும், 12 சென்னைப் பள்ளிகளில் ரூ22.55 கோடி மதிப்பில் வகுப்பறைகள் உட்பட கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, இந்தப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு முடிவுற்றவுடன் நிர்வாக அனுமதி பெறப்பட்டு விரைவில் ஒப்பம் கோரப்படும்.அதன் விவரம் ,

  • சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,சைதாப்பேட்டை – ரூ.2 கோடி.
  • சென்னை ஆரம்பப் பள்ளி,ஜோன்ஸ் சாலை;சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,சைதாப்பேட்டை -ரூ.4 கோடி
  • சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,நுங்கம்பாக்கம் – ரூ.2.60 கோடி.
  • சென்னை ஆரம்பப்பள்ளி;சென்னை மேல்நிலைப்பள்ளி, பட்டேல் நகர் – ரூ.7.70 கோடி.
  • சென்னை நடுநிலைப்பள்ளி;சென்னை உயர்நிலைப்பள்ளி, கூக்ஸ் சாலை – ரூ.4 கோடி.
  • சென்னை நடுநிலைப்பள்ளி;சென்னை உயர்நிலைப்பள்ளி, சர்மா நகர் – ரூ.1.50 கோடி.
  • சென்னை ஆரம்பப்பள்ளி;சென்னை மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்பேட்டை- ரூ.0.75 கோடி மதிப்பில் உட்பட கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

4 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

5 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

5 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

6 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

6 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

7 hours ago