வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள், தமிழகம் திரும்ப அரசு நடவடிக்கை.!

Default Image

வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்கள் உடனடியாக  திரும்ப விரும்புவார்களின்  நலனுக்காக  http://nonresidenttamil.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் காரணம் வைரஸ் காரணமாக இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் விமானம், பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள், தொழிலாளர்கள்  உள்ளிட்டோர் தமிழகம் வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், உடனடியாக தமிழகத்திற்கு திரும்ப விரும்புவார்களின் நலனுக்காக  http://nonresidenttamil.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த, இணையதளத்தில் தமிழகத்திற்கு திரும்ப விரும்புவார்கள்  பச்சை நிற பதிவு பட்டன் வாயிலாக தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதேபோல இந்தியாவில் இருந்து பல மாநிலங்களை சேர்ந்த வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது உள்ளனர்.

 அவர்கள், தங்கள் மாநிலங்களுக்கு செல்ல விரும்பினால் பழுப்பு நிற பதிவு பட்டன் வாயிலாக அவர்களின் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K