தைபூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து முதலமைச்சர் பழனிசாமிக்கு, சீமான் நன்று தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வரும் ஜனவரி 28-ம் தேதி அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா, தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தைப்பூசத் திருநாளை பொது விடுமுறை தினமாக அறிவித்த, முதல்வர் பழனிசாமிக்கு நாம் தமிழர் கட்சி சீமான் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழர் இறைவன் முப்பாட்டன் முருகப் பெருந்தகையைப் போற்றிக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழக அரசுக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…