கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதனிடையே ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.அந்த சோதனையில் ஆளுநருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது.கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…