தமிழ்நாடு

ஆளுநர் பொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – அமைச்சர் பொன்முடி

Published by
லீனா

சென்னையில் அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பின்பும் ஆளுநர் ஒப்புதல் ஒப்புதல் வழங்காத நிலையில், அமைச்சர் பொன் முடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைவிட மோசமான ஆளுநர் இருந்தது இல்லை. சங்கரையா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்திருக்க வேண்டும் சங்கரய்யா அவர்கள் நாட்டுக்காக  போராடி பலமுறை சிறை சென்றவர். தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை உள்ளவர் போல பேசிய ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை.

திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும் – அண்ணாமலை

வரலாறு தெரியாமல் ஆளுநர் பேசி வருகிறார் என்பது உறுதியாகி உள்ளது. கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஆளுநர் ஏன் மறுக்கிறார். ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு சுந்தரப் போராட்ட வீரர்கள் மீதெல்லாம் மரியாதை இல்லை. அதிலிருந்து வந்தவர் என்பதால் தான் ஆளுநர் வெறித்தனத்தோடு செயல்படுகிறார்.

தினமும் பொய் பேசுவதையே ஆழ்ந்த தன் தொழிலாக கொண்டுள்ளார். பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு திராவிடம் மாடல் அரசு தான் உண்மையாக மரியாதை அளிக்கிறது. அமைச்சரவை சொல்வதை செய்வது தான் ஆளுநரின் வேலை. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

ஆளுநர் அவர்களே நீங்கள் தேர்தலில் நின்று, ஜெயித்து வந்த பின், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி கருத்துக்களை பேசுங்கள். உண்மைக்கு புறம்பான பல்வேறு செய்திகளை கூறி, இந்த ஆட்சியின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை நாட்டுமக்கள் புரிந்து வைத்துள்ளனர். ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் என்னை பேச விடுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

53 seconds ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

59 minutes ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

1 hour ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

3 hours ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

3 hours ago