Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!
இன்று சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம் முதல் சர்வதேச நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளை இதில் காணலாம்.

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடுகிறது. கூட்டணி அதிருப்தியில் இருக்கும் கட்சியின் மூத்த மற்றும் கடைநிலை நிர்வாகிகளிடம் ஈபிஎஸ் கருத்து கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நேற்றைய தினம் நள்ளிரவு, குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே உள்ள பாகிஸ்தான் இராணுவ நிலைகளில் இருந்து , இந்திய நிலைகள் மீது சிறிய ரக துப்பாக்கிச் சூடு நடத்தின. இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்கு புரியும் வகையில் பதிலடிகொடுத்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலி பரப்ப பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (பிபிஏ) தடை விதித்துள்ளது.