கின்னஸ் சாதனை படைத்தது கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான்!

கின்னஸ் உலக சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மாரத்தான் போட்டி காலை 4 மணிக்கு மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து தொடங்கியது.
மாரத்தான் போட்டியின் தொடக்க நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாரத்தான் போட்டியானது 42.2 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் தூரங்களுக்கு நடைபெற்றது. காலை 4 மணிக்கு 42.2 கி.மீ க்கான மாரத்தான் போட்டியை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அதன் பின், 5 மணிக்கு 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டருக்கான மாரத்தான் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 70 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு 9 பிரிவுகளில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தற்போது, சென்னையில் நடந்த கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்தது. லண்டனில் இருந்து வந்த கின்னஸ் குழுவினர் நீண்டதூர ஓட்டப்பந்தயம் என்ற பிரிவில் சான்றிதழ் வழங்கினர்.