தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்

tamilnadu government

தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

  • சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மதுறை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்.
  • திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம்.
  • சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம்.
  • அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம்.
  • சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம்.
  • தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம்.
  • வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தாம்பரம் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக நியமனம்.
  • சென்னை தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் சக்திவேல் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமனம்.
  • மதுரை மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த அரவிந்த் சிவகங்கை எஸ்.பி.யாக நியமனம்.
  • மயிலாடுதுறை எஸ்.பியாக இருந்த நிஷா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமனம்.
  • காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் உட்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் தான்  27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு அதிரடியான பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்