ஆர்.எஸ்.பாரதி யின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆர்.எஸ.பாரதியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் மே 31-ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.இதனால் ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றம் வந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்று, உயர்நீதிமன்றத்தை நாட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.மேலும் வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…