நெஞ்சை பதறவைத்த கோர விபத்து.! பெண் உட்பட 6 பேர் பரிதாப பலி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சேலம் நெடுஞ்சாலையில் நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்த ஆம்னி பஸ் மீது தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாப பலி.

நேபாள நாடு காட்மண்ட் பகுதியைச் சேர்ந்த 33 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது ஆம்னி பஸ் ஒன்றில் கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள சிறபவம்சங்களை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஆம்னி பஸ்சில் புறப்பட்ட அவர்கள் நள்ளிரவு 1 மணி அளவில் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் நரிப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது போது அருகில் உள்ள கோவில் மண்டபத்தில் தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று  பஸ்சை டிரைவர் எதிர்புற சாலையில் செல்ல திருப்பியுள்ளார். அப்போது பெங்களூருவில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்வதற்காக வேகமாக வந்த மற்றொரு தனியார் பஸ் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற பஸ்சின் நடுப்பகுதியில் பயங்கரமாக மோதியது.

இதனால் பஸ் கவிழ்ந்து பயணிகள் ரத்த வெள்ளத்தில் கதறி துடித்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் உடனே அங்கு விரைந்து சென்ற காவல்துறை காயம் அடைந்தவர்களை மீட்டனர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே நேபாள நாட்டை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் காயமடைந்த மற்றவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் பெண் உட்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து, பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. மேலும் படுகாயத்துடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் பரப்பரப்பு ஏற்பட்டது, போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

9 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago