சென்னையில் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்துவருகிறது .இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் .
இதனிடையே சென்னை மாநகரில் காலையில் வெயில் வாட்டி வதைத்து ஆனால் மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.மழையானது வடபழனி ,நுங்கம்பாக்கம் ,ராயப்பேட்டை ,தியாகராய நகர் ,கோடம்பாக்கம் ,அண்ணா சாலையில் மழை பெய்தது .
கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயில் வாட்டிவதைத்து வருகிறது .வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்துவரும் மழையால் பொதுமக்கள் வெயிலின் பிடியிலிருந்து சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025