Heavy Rain in Tamilnadu [File Image]
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை – மிதிலி புயல் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது,
தற்போது குமரி கடலிலும் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழக்த்திற்கு 2 நாள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த வளிமண்டல சுழற்சி மூலம் புதுச்சேரி, கேரளா பகுதிகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையமும் நேற்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. நேற்று இரவு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் இடைவிடாது மழை பெய்தது. நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்து, இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு எனவும்,
குமரிக்கடல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக நேற்று இரவு கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…