அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த 7-ஆம் தேதியன்று, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த கௌதம் நகரில் இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு இறுதியில் மோதலாக மாறிய நிலையில், இரு தரப்பினரும் கத்தி, பாட்டில் என கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இந்த மோதலில் அர்ஜுன், சூர்யா என இருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இருவரையும் இழந்து தவிப்போருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
எத்தனை கருத்து மோதல்கள் இருந்தாலும், தேர்தலோடு அவற்றை மறந்துவிட்டு, தமிழக மக்கள் அனைவரும் சகோதரர்களாக, சமூக நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும், சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…