6 மாதத்திற்குள் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மநீம வரவேற்பு.
பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும்,டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி,மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடை அருகேயுள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும்,டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வழக்கை தள்ளுபடி செய்து,தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவிற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்த உத்தரவிற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில், ‘டாஸ்மாக் கடைகளில் பார்கள் நடத்த சட்டத்தில் இடமில்லை; உடனடியாக மூட வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை மநீம வரவேற்கிறது. லட்சக்கணக்கான தமிழர்களை குடிநோயாளிகளாக மாற்றிய கழகங்கள் இதனை உடனடியாக நிறைவேற்றவேண்டும். படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை,பணிநேரம் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…