கடந்த ஜனவரி மாதம், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசும் பொருளானது.
ஹிஜாப் அணிய தடை
மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து கர்நாடகா மாநில பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்தது. இதனையடுத்து, முஸ்லிம் மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும்
இந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 6மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது
ஹிஜாப் விவகாரம் குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இந்திய துணைக்கண்டத்தில் இருக்கக்கூடிய அரசியல் சாசன சட்டம் என்பது பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை என பல்வேறு அடிப்படை உரிமையை நமக்கு தந்துள்ளது. இவ்வாறு ஒரு தனி நபரின் உரிமையை தடுப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…