இந்தியில் எழுதப்பட்டருந்த வார்த்தைகள்..! கருப்பு மை கொண்டு அழிப்பு..!திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் இந்தியில் எழுதப்பட்டருந்த வார்த்தைகள் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் புதிய கல்வி கொள்கையை குறித்து கடும் விவாதாம் நாடு முழுவதும் எழுந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டனங்களையும் மற்றும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் திருச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ள தகவல் பலகைகளில் இந்தியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளை கருப்பு வண்ணம் கொண்டு அழிக்கப்பட்டது.
அதே போல் அஞ்சல் அலுவலகம் மற்றும் திருச்சி விமான நிலையத்திற்கு வெளியில் உள்ள தகவல் பலகைகளில் இந்தியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளை கருப்பு வண்ணம் கொண்டு அழிக்கப்பட்டது.இது மக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.