கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் சுத்தப்படுத்தக் கூடாது.. மீறினால் குற்றவியல் நடவடிக்கை!

கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் சுத்தப்படுத்தக் கூடாது என்று நகராட்சித்துறை உத்தரவு.
எந்த ஒரு நிறுவனமோ தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை இறக்க கூடாது என்றும் மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் மூலம் சுத்தப்படுத்தினால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிமை பெறாத லாரிகளை கழிவுநீர் ஈடுபடுத்தக்கூடாது, விதிகளை மீறும் லாரிகளுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரம், 2வது முறை ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். கழிவுநீர் சுத்தம் செய்யும்போது இறப்பு ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும், திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றக்கூடாது எனவும் நகராட்சித்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025