சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் அருகே உள்ள வெடிக்காரன்புதூர் நாய்க்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி.இவர் மர அறுக்கும் கூலி தொழில் செய்து வருகிறார்.இவருடைய மனைவி தங்கமணி.
இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன.பாலசுப்பிரமணி தினமும் அளவுக்கு மீறி குடிப்பாராம்.இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இவர் வேலைக்கு செல்லாமல் மனைவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று பணம் வாங்கிவா என்று நச்சரிப்பாராம்.கணவனின் கொடுமையை தாங்கமுடியாத தங்க மணி,அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவாராம்.
அங்கயே சென்று சண்டை போடுவாராம்.இதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அப்போது காவல்துறையினர் இருவரையும் நேரில் அழைத்து சமாதானம் செய்துவைத்துள்ளார்.இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.வழக்கம் போல் தங்கமணி அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மனைவியை பிரிந்ததால் கணவன் தனிமையில் தவித்துள்ளான்.இந்நிலையில் செவ்வாய் கிழமை காலை மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை வீட்டிற்கு வரச்சொல்லி கெஞ்சியுள்ளார்.
ஆனால் தங்கமணி நம்புவதாக தயாராகவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் வீட்டில் இருந்த அருவாளை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார்.
உயிருக்கு போராடிய மனைவி அலறியபடி வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார்.இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உடனே தங்கமணியை சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும்வழியில் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய கணவன் பாலசுப்ரமணியனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றன.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…