120கி.மீ தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு மனைவியை சைக்கிளில் அழைத்து சென்ற கணவர்.!

Published by
Ragi

கடந்த மார்ச் மாதத்தில் புற்றுநோயின் வலியால் அவதிப்பட்டு வந்த தனது மனைவியை கணவர் சைக்கிளில் அமர வைத்து 120 கி. மீ தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை அடுத்து, தற்போது அந்த பெண்மணி மரணமடைந்துள்ளார்.

தஞ்சாவூர் கும்பகோணத்தில் உள்ள மகாராஜபுரம் மணல்மேட்டு ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி அறிவழகன் (60). இவரது 2வது மனைவியான மஞ்சுளாவிற்கும் (39), அறிவழகனுக்கும் 12வயதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகன் உள்ளார் . இந்த நிலையில் மனைவி மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை கடந்த 9 மாதங்களுக்கு பெற்று வீடு திரும்பியுள்ளார்.

அதனையடுத்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் வலியால் அவதிப்பட்டு வந்த மஞ்சுளாவை அறிவழகன் கடந்த மார்ச் 29ம் தேதி தனது சைக்கிளில் வைத்து கும்பகோணத்தில் இருந்து 120கி.மீ தொலைவில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்ற சம்பவம் சமூக ஊடகங்களில் பரவ அறிவழகனின் அன்பை பலர் பாராட்டியதோடு, பணம், பொருள் கொடுத்து உதவினார் முன்வந்தனர். மருந்து, மாத்திரைகளில் வாழ்ந்து வந்த மஞ்சுளா நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தனது மனைவியின் இறப்பு  குறித்து அறிவழகன் கூறுகையில் , பலரிடம் பணம் கடன் வாங்கியும், பலர் உதவியும் மனைவிக்கு மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்து கவனித்தேன். இருப்பினும் அவரை என்னால் காப்பாற்ற முடியாமல் போனது என்று மனமுடைந்து கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

1 hour ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

2 hours ago

காசா கடற்கரை உணவகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை வான்வழி தாக்குதல்…22 பேர் பலி!

காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…

2 hours ago

திருப்புவனம் : அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் – பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்த கெவின் பீட்டர்சன் கொடுத்த டிப்ஸ்…உண்மையை உளறிய குல்தீப் யாதவ்!

பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…

3 hours ago

குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்!

டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…

3 hours ago