குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்!
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.58 குறைந்து ரூ.1823-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு, நள்ளிரவு முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர்களுக்கு மட்டும் இந்தக் குறைப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, சர்வதேச எண்ணெய் விலை குறைவு மற்றும் புழக்கத்தில் உள்ள பொருளாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.
உதாரணமாக, டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.1,764.50 இலிருந்து ரூ.1,706 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், சென்னையில் ரூ.1,911 இலிருந்து ரூ.1,852.50 ஆகவும், மும்பையில் ரூ.1,717 இலிருந்து ரூ.1,658.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,879 இலிருந்து ரூ.1,820.50 ஆகவும் விலை குறைந்துள்ளது.
அதே சமயம், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ.818.50 ஆகவே தொடர்கிறது. இந்த விலை குறைப்பு, உணவகங்கள், ஹோட்டல்கள், மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் வீட்டு உபயோக பயனர்களுக்கு நேரடி பலன் இல்லை.