சென்னையை சேர்ந்த 61 வயது மஞ்சுநாத் என்ற தொழிலதிபர் அடிக்கடி புதுவையில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனையடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் ராஜேஷ் என்பவர் அவருக்கு நண்பரானார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழிலதிபருக்கு போன் செய்த ராஜேஷ், புதுவையில் புதிய மசாஜ் சென்டர் கிளை ஒன்றைத் திறந்து உள்ளதாகவும் அதில் இளம் பெண்கள் மசாஜ் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் சபல ஆசையுடன் அந்த புதிய மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இடம் மசாஜ் சென்டர் போலவே தெரியவில்லை.
இதனையடுத்து உள்ளே தொழிலதிபரை அழைத்துச் சென்ற ராஜேஷ் மற்றும் அவரது மனைவி, அவரை மிரட்டி நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தனர். பின்னர் அவரிடம் இருந்த பணம், நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை எடுத்து கொண்டு அவருடைய செல்போனில் இருந்து ’கூகுள் பே’ மூலம் ரூபாய் ஐந்து லட்சத்தை தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்து கொண்டனர்.
பின்னர் இதனை வெளியே சொன்னால் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கணவன், மனைவி இருவரும் மிரட்டியுள்ளனர். இதன் பின்னர் மஞ்சுநாத் போலீசிடம் புகார் அளிக்க, போலீஸ் ராஜேஷ், அவருடைய மனைவி மற்றும் அவருடைய நண்பர் மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…