மகிழ்ச்சியுடன் தான் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் ஆசை பலிக்காது என ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் எனும் போட்டிகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்நிலையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆன கேபி முனுசாமி அவர்கள் விரைவில் அதிமுகவின் வழிகாட்டுதல்படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார் என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று முதல்வர் வேட்பாளர் யார் என்பது ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அதிமுக சார்பில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் முன் நிறுத்தப்படுவார்கள் என பன்னீர்செல்வம் அவர்கள் கூறியுள்ளார். இந்நிலையில் மகிழ்ச்சியுடன் தான் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன் எனவும், அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்னும் எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது எனவும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…