பெண்களுக்கு இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி புரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறிய நிலையில் அவரை விமர்சிக்கும் வகையில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ஆண்டுகால ஆட்சியில் ஆண்களுக்கு இரண்டரை ஆண்டுகளும், பெண்களுக்கு இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி புரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
இதனிடையே தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை. மக்கள் நீதி மலரும் போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள். எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…