கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வீசி வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை நெருங்குகிறது. பொதுமக்களும் போதிய விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் கழக உடன்பிறப்புகள் சால்வை, பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
குறுகிய கால இடைவெளியில் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கி இருந்தாலும், அமமுக தொண்டர்கள் களப்பணி ஆற்றுவதை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன். அம்மாவின் உண்மையான ஆட்சி நாம் அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் வேளையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
மக்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்ய செல்லும்போதும், நான் உள்ளிட்ட கழக முன்னணியினர், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்யவரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், எனக்கு சால்வை அணிவிப்பது, பூங்கொத்து கொடுப்பது, பரிசுப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்டவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் இரண்டாவது அலையாக நம்மை நெருங்கும் ஆபத்து உள்ள சூழலில், விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் தேர்தல் களத்தை அணுகவேண்டும் என்று தமிழக மக்களை கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…
காசா : கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…
சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…