என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன் – கமல்ஹாசன் அதிரடி பேச்சு..!

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அந்நேரத்தில் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம் எதன் காரணமாகவும் தனது பணியை நிறுத்தாது எனவும் முன்பை விட வேகமாக செயல்பட்டு மக்களின் ஆதரவைப் பெறுவோம் எனவும் குறிப்பிட்டார்”. மேலும் அவர், எனக்கு சோதனைகளும், விமர்சனங்களும் புதிதல்ல. என் நேர்மையைச் சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்று ஆவேசத்துடன் பதிலளித்தார்.
அதன் பிறகு, நமது கட்சிக்காக பாடுபடுபவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும், இந்த கட்சியில் வரவிருக்கும் சீர்திருத்தங்கள் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். உண்மை தெரிந்து ஒருநாள் இப்போது விமர்சனம் மற்றும் விலகி நிற்கும் ஊடகங்கள் நம்மை தேடி வரும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025