பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் என் நேர்மையை சந்தேகிப்பவர்களை சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்நேரத்தில் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம் எதன் காரணமாகவும் தனது பணியை நிறுத்தாது எனவும் […]
வாக்களித்த வாக்களிக்காத ராயபுரம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெருபான்மையான இடங்களை பிடித்து வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் சென்னை இராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 19,082 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி, 49,543 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் இது குறித்து […]
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானது. இந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் 5,76,037 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 பெற்றார். இதையடுத்து 1,37,950 […]
கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியையும் திமுகவினர் கைப்பற்றினர். தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைப்பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி கனியை பறித்துள்ளது. இந்நிலையில், கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதியில் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சிவகாமசுந்தரி, குளித்தலை தொகுதியில் மாணிக்கம் ஆகியோர் தி.மு.க சார்பில் போட்டியிட்டனர். இதனையடுத்து, இந்த 4 தொகுதிகளிலும் திமுகவினர் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில், இருந்து வருகிற நிலையில், தற்போது திமுக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் […]
மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில், இருந்து வருகிற நிலையில், தற்போது திமுக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்வீட்டர் பக்கத்தில், மு.க.ஸ்டாலினுக்கு […]
தேனாம்பேட்டையில், தடையை மீறி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இதில், தற்போதைய நிலவரப்படி, திமுக 149 இடங்களிலும், அதிமுக 84 இடங்களிலும், மநீம ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், திமுகவினர், தற்போது இருந்தே தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அந்த […]
கழக வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. அதில், 71.43 சதவிகித வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும். வாக்கு என்னும் இடங்களில் குவிந்து சாதகமான முடிவுகள் வர வர ஒன்று […]
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. அதனை யாராலும் ஹேக் செய்ய இயலாது. தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் மே-2ம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும் என்றும், வாக்கு பதிவு இயந்திரம் குறித்த சில தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மே-2ம் தேதி காலை 8:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை […]
எம்.ஜி.ஆர் வைத்த இலை மரமாக வேண்டும் என்று தான் விரும்பினார். இரட்டை இலை இரண்டு பேர் வைத்து விருந்து சாப்பிட அல்ல. அதை அப்படி ஆக்கி விட்டார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், திருப்பூரில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் வைத்த இலை மரமாக வேண்டும் என்று தான் விரும்பினார். இரட்டை இலை இரண்டு பேர் வைத்து விருந்து சாப்பிட அல்ல. அதை […]
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.இதில் காங்கிரஸ் 15 மற்றும் தி.மு.க. 13 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இந்நிலையில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்த வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை. #BREAKING புதுச்சேரி சட்டசபை 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.#Pudhucherry | #congress pic.twitter.com/hohLDnDb0Q — Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) March 16, 2021
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – 2021 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த 12 ஆம் 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தற்பொழுது 15 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – 2021 அம்மா […]
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இது குறித்த வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.இந்த முதல் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட ஆறு பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த 6 பேர் கொண்ட பட்டியில் மிகவும் கவணிக்கதக்கதாக மாறியுள்ளது ஏன்னென்றால் இந்த 6 பேர் பட்டியலில் 4 தொகுதிகளையும் 2 தொகுதியில் காங்கிரஸை நேரடியாக எதிர்கொள்கிறது பாஜக. இதில் கோவை தெற்கு மும்முனை போட்டியாக மாறியுள்ளது. மக்கள் நீதி […]
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இது குறித்த வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.இந்த முதல் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட ஆறு பெயர் இடம்பெற்றுள்ளது. தாராபுரம் (தனி ) -எல்.முருகன் கோவை தெற்கு – வானதி சீனிவாசன் காரைக்குடி -ஹெச்.ராஜா அரவக்குறிச்சி -அண்ணாமலை நாகர்கோவில் -எம்.ஆர்.காந்தி ஆயிரம் விளக்கு -குஷ்பு துறைமுகம் – வினோஜ் பி.செல்வம் திருவண்ணாமலை – தணிகைவேல் மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி திட்டக்குடி […]
திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக தேர்தல் களம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துள்ளது.திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தனது கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்று ஒதுக்கிய நிலையில் எந்த தொகுதி யாருக்கு பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.இதில் அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இதில் […]
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதியானது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் . அதிமுக தலைமையகத்தில் வைத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உடன் பாஜக நிர்வாகிகள் பாஜக வேட்பளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பாஜக விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது 20 இடங்களுக்கான தொகுதிகள் இறுதியானதாக பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியே வந்த எல்.முருகன் தெரிவித்துவிட்டு சென்றார். இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்,கிஷன் ரெட்டி ,எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.சுமார் 2 மணி நேரம் […]
தமிழக தேர்தல் களம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை,தொகுதிப்பங்கீடு ,நேர்காணல் மற்றும் வாக்காளர்களை கவரும் அறிவிப்புகள் என நொடிக்கு நொடி செய்திகளை வழங்குகிறது உங்கள் தினச்சுவடு.இதில் காலை 6 முதல் மாலை 6 முக்கிய டாப் 10 செய்திகளை இன்று முதல் வழங்குகிறோம். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்- விஜயகாந்த் அறிவிப்பு மேலும் படிக்க ஜெயிக்க போவது யாரு? அதிமுகவா? திமுகவா? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல். […]
திமுக வுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை.இதில் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. திமுகவுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.கொ.ம.தே. கட்சி 4 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 3 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அணல் பறக்க தொடங்கியுள்ளது.திமுக மற்றும் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்னும் முடிவு பெறாத நிலையில்,நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்க உள்ளது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இதில் தமிழக சட்டசபை தேர்தலுக்காக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிவிக்கிறார் சீமான்.இந்த வேட்பாளர்கள் அறிவிப்பில் அறிவிப்பில் 50% பெண்கள் 50% ஆண்கள் இடப்பெற உள்ளனர்.
திருச்சி சிறுகனூரில் இன்று திமுக சார்பில் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்திற்கான 10 ஆண்டுகள் தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார். திமுகவின் 14 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநில மாநாடு பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்டமாக சுமார் 750 ஏக்கரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதில் 400 ஏக்கர் வாகனம் நிறுத்தவும், 350 ஏக்கர் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு […]