கரூர்: நிலமோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலி பத்திரங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, அண்மையில் காவல்துறையினரிடம் இருந்து […]
கரூர் : சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூளை பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார். இதனையடுத்து, இன்று அதிகாலை சாமி வழிபாடு முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டி கோட்டை அருகே […]
கரூர்: 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டவிரோதமாக பதிவு செய்ததாக பதியப்பட்ட புகாரின் கீழ் அவரை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கரூர், குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலி சான்றிதழ்கள் மூலம் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கரூர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி புகார் பதியப்பட்டது. […]
எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது மகள் ஷோபனா ஆகியோருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . இந்த புகாரின் பெயரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அண்மையில், காவல்துறை வசம் இருந்து சிபிசிஐடி பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதனை […]
கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என அம்மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து க.பரமத்தி வட்டார துணை தலைவர் விசுவை ஆர்.செந்தில் குமார் அவரது ரத்தத்தில் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சி.சேகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தற்போதைய, முன்னாள் நிர்வாகிகள் பலர் பேசினர். […]
சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில் கரூர் புறவழிச்சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பங்களா கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது. பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! அசோக்குமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் […]
கரூர் மாவட்டம் இடையப்பட்டி எனும் ஊர் அருகே உள்ள சித்திரசீலமநாயக்கன் எனும் ஊரில், மனுதாரர் (உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்) அண்மையில் கலப்பு திருமணம் செய்துள்ளார். கலப்பு திருமணம் செய்து ஊருக்குள் வந்த போது ஊர் மக்கள் அவரை ஊருக்குள் விடாமல் தடுத்துள்ளனர். மேலும், அவரது வீட்டை சுற்றி 4 புறமும் தீண்டாமை வேலி அமைத்ததாக தெரிகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பது தான் […]
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்காக நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் 5வது வார்டு உறுப்பினர் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து தேர்தல் முடிவை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர். கடந்த டிச19ம் […]
கரூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19ஆம் தேதி கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுகவை சேர்ந்த திருவிக என்பவர் கடத்தப்பட்டதாகவும், இந்த தேர்தலில் திமுக முறைகேடாக செயல்பட்டதாகவும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது எனவும் அந்த மனுவில் குறிப்பிடபட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]
கரூர் மாவட்ட கவுன்சிலர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். கடந்த தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட தமிழக அமைச்சரவையில் புதியதாக விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அண்மையில், கரூரில், கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 36வது வார்டு கவுன்சிலர் வசுமதி, கரூர் மாநகராட்சியில் ஒரு தெருவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை வைக்க தீர்மானம் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு. கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்தது உள்ளிட்ட பிரிவில் 10 பேர் மீது தான்தோன்றிமலை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி நேற்று ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் […]
கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திருவிக என்பவரை அழைத்துக்கொண்டு, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சிலர் முன்னாள் அமைச்சர் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும், […]
கரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு, அரைநிர்வாணமாக திரிந்த ஒரு முதியவரை சாமியார் என கூறி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதிவர் ஒருவரை சித்தர் என கூறி அங்குள்ளவர்கள் வணங்கி வந்துள்ளனர். காணிக்கையையும் அளித்து வந்துள்ளனர். இதில் ஒரு கும்பல், இவருக்கு கோவில் காட்டுவதாக கூறியும் காணிக்கை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து , கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, அந்த முதியவரை […]
மாண்டஸ் புயல் எதிரொலியாக ஏற்கனவே 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்க்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர்,காவேரிப்பட்டினம்,மத்தூர்,ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியாக ஏற்கனவே 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, […]
கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், […]
கட்டடம் கட்டும் போது செப்டிக் டேங்கில் இருந்து விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த சம்பந்தப்பட்ட கட்டடம் முழுதாக இடிக்க கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , அதன் உள்ளே இருக்கும் சவுக்கு கம்புகளை அவிழ்க்க, உள்ளே சென்ற தொழிலாளர்கள் 4 பேர் உள்ளே விஷ […]
கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு. கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது வழக்குப்பதிவு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் வாள்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட பாஜக சார்பில் நேற்று கரூர் பேருந்து நிலையம் அருகே மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடந்தது. சட்டவிரோதமாக பொது இடத்தில் கூடுதல், பொது சாலையை மறித்து இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல். டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவை, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஆலோனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் விரிவாக்கம் செய்யும் […]
கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் பணியிடை நீக்கம். கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நெஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சாலை போடாமல் போடப்பட்டதாக கூறி அதிகாரிகள் துணையுடன் பணத்தை முறைகேடு செய்ததாக […]