செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ரெய்டு..!

சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில் கரூர் புறவழிச்சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பங்களா கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது. பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!
அசோக்குமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இந்த நோட்டீஸ் குறித்து இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்காமல் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், மீண்டும் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, பொறியாளர்கள் உதவிகளுடன் பங்களா கட்டிடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கொங்கு மெஸ் உணவகத்தின் உரிமையாளர் செந்தில் பாலாஜியின் நண்பர் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025