இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன்-சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி

Published by
Venu

இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன் என்று சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி  தெரிவித்துள்ளார்.

ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இன்று  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.பின்னர் சபாநாயகர் தனபாலை சந்தித்தார்.

முதல்வர், சபாநாயகரை சந்தித்தபின்  சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தடுமாறிப்போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரைத்தான் சேரும். மீண்டும் எம்எல்ஏவாக செயல்படுவேன். அமமுகவை பற்றி நான் இப்போது விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.

டிடிவி தினகரனை மக்கள் புறக்கணித்துவிட்டனர்.எம்எல்ஏக்கள் பிரபு, கலைச்செல்வன் ஆகியோரும் விரைவில் அதிமுகவுக்கு வருவார்கள்.

தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கியவுடன் அவரிடம் இருந்து விலகிவிட்டேன்.பழையபடி கட்சி பணியாற்றுவேன்.இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன்.அதிமுகவை வலிமையுடன் நடத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ஆகும்.இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணியவன் நான் .சபாநாயகரை மரியாதை நிமிர்த்தமாக தான் பார்த்தேன் என்று தெரிவித்தார்.

Recent Posts

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

10 minutes ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

16 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

16 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

17 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

18 hours ago