சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜீரோ வாங்கும் என்பதால் அவர்களை பாஜக பயன்படுத்த முடியாது என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்னும் சிறிது நேரத்தில் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர். இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் முக ஸ்டாலின், தற்போது திரு.வி.க.நகர் தொகுதியில் தாயகம் கவிக்கு ஆதரவு கோரி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலையிலான ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதவெறி பிடித்த பாஜகவுக்கு ஜீரோ கொடுத்தோம். அதுபோன்று சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஜீரோ கொடுக்க போறோம். அதிமுக, பாஜகவுக்கு ஜீரோ என்றால் திமுகதான் ஹீரோ என தெரிவித்துள்ளார்.
ஆகவே, 234 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெற போகிறது. வெற்றி பெற்றதும் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியவற்றை நிறைவேற்றுவோம் என கூறி அறிக்கையில் உள்ள முக்கிய சிறப்புகளை பட்டியலிட்டார். மேலும், போகின்ற போக்கை பார்த்தால் தேர்தலுக்காக இனி அதிமுகவை கூட பாஜக பயன்படுத்த முடியாது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜீரோ வாங்கும் என்பதால் அவர்களை பாஜக பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…