ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த், நான் வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி எனவும், தோற்றாலும் அது மக்களின் தோல்வி என கூறினார்.
வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதனையடுத்து சென்னை, போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் உயிர் பிழைத்து வந்ததற்கு காரணம், தமிழக மக்களின் பிரார்த்தனைகள் தான் என கூறினார்.
மேலும் பேசிய அவர், கொடுத்த வாக்கை என்றும் தவற மாட்டேன் என்றும், மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதிட்டமிட்டிருந்தாக கூறிய ரஜினி, கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என்றும், வெளியே சென்று மக்களை சந்தித்து உயிரே போனாலும் அது தமிழக மக்களுக்காக என்பதில் எனக்கு சந்தோஷம் தான் என உரையாற்றினார்.
அதுமட்டுமின்றி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன் எனவும், நான் வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி எனவும், தோற்றாலும் அது மக்களின் தோல்வி என்றும், அரசியல் மாற்றம் தேவை. அது கட்டாயம் நிகழும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…