டெல்லியில் பாஜக எம்.எல்.ஏக்களை சந்தித்த போது,தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து,கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்றும்,காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துமாறும்,மேலும்,முல்லை – பெரியார் அணை பிரச்சனை போன்றவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர்,டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு துரைமுருகன் திரும்பினார்.
இதற்கிடையில்,தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர் காந்தி ஆகியோர்,டெல்லியில் முகாமிட்டு, பிரதமர்,மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் போன்றவர்களை சந்தித்து வருகின்றனர்.இவர்களும் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில்,டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் எல்.முருகன் அவர்களும்,அமைச்சர் துரைமுருகன் அவர்களும் எதிர்பாராதவிதமாக சந்தித்து கொண்டனர்.அப்போது, எல்.முருகன் “அய்யா வணக்கம் நல்லா இருக்கீங்களா?” என நலம் விசாரித்தார். அப்போது,செய்தியாளர் ஒருவர் “உங்கள் நண்பர்கள் வருகிறார்கள்” என்று கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்,”தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான், “,என்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…