பழனிசாமியை அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டும் கூட்டணியில் இருங்கள் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்று கூறினார் . மேலும் இப்போது உள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம் ,இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம்.முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணி உடன்பாட்டிற்கு பின் அறிவிக்க வேண்டிய விஷயம் என்று கூறினார்.இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் பொன் .ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு அதிமுகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இது குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும், எங்களால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும். ஏற்றுகொள்ளாதவர்கள் நிச்சயம் எங்கள் கூட்டணியில் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…