நேரடி விவாதத்திற்கு நான் ரெடி, நீங்கள் ரெடியா? -முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவாலை ஏற்றுள்ளார்
நேற்று ஈரோட்டில் நடந்த பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,நான் இப்போது திமுக தலைவர் ஸ்டாலினை நேரடி விவாதத்துக்கு அழைக்கிறேன்.தைரியம் இருந்தால் ஒரு கட்சியின் தலைவராக ஸ்டாலின் எந்த இடத்திற்கும் வரலாம்.நான் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன்.எந்த இடத்திற்கும் துண்டுச் சீட்டு இல்லாமல் மு.க.ஸ்டாலின் அழைத்தால் வருவதற்கு நான் தயார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,முதலமைச்சர் பழனிசாமியின் சவாலை ஏற்றுள்ளார்.இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா?’ என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி நேற்று சவால் – சவடால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்!
“டெண்டர் ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்ற தடையை நீக்கி – தன் மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநர் அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்றி விட்டு விவாதிக்க நான் ரெடி – நீங்க ரெடியா?”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சவால்.https://t.co/Qj8e6GYqKU pic.twitter.com/AgguwO8Y2c
— DMK (@arivalayam) January 7, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025