#BREAKING: அஞ்சல் தேர்வு.. தமிழ் புறக்கணிப்பு..!

The Tamil language has been ignored in the announcement of the examination for the postal service to be held next month.

அஞ்சல்துறைக்கான மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது.

அஞ்சல்துறைக்கான அக்கவுன்டன்ட் பதவிகளுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள அஞ்சல்துறைக்கான தேர்வு அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறைக்கான மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது.

அஞ்சல்துறை தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். தமிழில் தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.