டிக்-டாக் மூலம் மிகவும் பிரபலமான ஜி.பி.முத்து கார் ஒன்றை வாங்கியுள்ளார்.மேலும்,தனது பரம்பரையிலே கார் வாங்கிய முதல் நபர் தான்தான் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிராமப் பகுதியில் வசிக்கும் ஜி.பி.முத்து,பழைய மற்றும் புதுமையான கதவு,ஜன்னல் போன்ற மரச்சாமான்களை விற்பனை செய்யும் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
ஆரம்பத்தில்,பொழுது போக்கிற்காக டிக்-டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்த ஜி.பி.முத்து,ஒரு கட்டத்திற்குமேல் டிக்-டாக்கிற்கு அடிமையானார்.இதனால்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
ஆனால் திடீரென்று, டிக்டாக் செயலி இந்தியாவில் தடை என்று அரசு அறிவித்தது ஜி.பி.முத்துவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.இருப்பினும்,தனியார் தொலைக்காட்சி ஒன்றின் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு,தனது ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.மேலும்,யூ-டியூப்பில் சேனல் ஒன்றை ஆரம்பித்து தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இதனால் ஜி.பி.முத்துவின் புகழ் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில்,ஜி.பி.முத்து செகண்ட் ஹான்டட் (second handed) கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இதைப் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு,”என் பரம்பரையிலேயே முதல் முறையாக கார் வாங்கியிருப்பது நான் தான்”,என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.இதனையடுத்து,சமூக ஊடகங்களில் பலரும் ஜி.பி.முத்துவிற்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…