திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு.!
70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், 18 பெட்டிகள் தீயில் சேதம் எனவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில், 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். 27,000 லிட்டர் டீசலுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக எரியும் ரயில் டேங்கர்கள் தீயை அணைக்கும் பணியில் 50 பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து விரைந்துள்ளனர்.
52 பெட்டிகள் கொண்ட ரயிலில் 18 டேங்கர்கள் தீயில் எரிந்து நாசமாகியது. மதியம் 1 மணிக்குள்ளாக தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகே இருந்த வீடுகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டனர்.
தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைப்பது சிரமமாக உள்ளதால் ரசாயனக் கலவை பயன்படுத்தப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையின் 15 அதிகாரிகள் உள்பட 85 பேர் ஈடுபட்டுள்ளனர். ஹூண்டாய் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து காரணமாக, ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் குறித்த தகவல்களை அறிய உதவி எண்களை (044-25354151, 044-24354995) அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர சேவை மையம் அமைக்கப்பட்டு, பின்வரும் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்த தகவல்களையும், பயணிகளுக்கான உதவிகளையும் பெறலாம்.
இதனிடையே, சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் அரக்கோணத்தில் 15 ரயில்கள் நிறுத்தப்பட்டது. மைசூரு – சென்னை காவிரி ரயில், கோவை – சென்னை சேரன் ரயில்கள் நிறுத்தம். திருப்பத்தூர் – சென்னை ஜோலார்பேட்டை ரயில் அரக்கோணத்தில் நிறுத்தம் என் 10க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டது.