”வெற்று விளம்பர திமுக, இப்போ ‘Sorry மா’ மாடல் ஆட்சியாக மாறிவிட்டது” – கடுமையாகச் சாடிய விஜய்.!
சென்னையில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்ததாக கூறப்படும் 24 பேரது குடும்பத்தினருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands Justice என்ற பேரணி நடத்தப்பட்டது. மக்கள் போராட்டத்தில் முதல் முறையாக விஜய் களமிறங்குவதால் ஆயிரக்கணக்கான தவெகவினர் குவிந்தனர்.
ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிலையில், ஆர்ப்பாட்ட மேடையில் கருப்பு சட்டை அணிந்து விஜய் மற்றும் காவல் நிலையங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் மேடை ஏறினார். குறிப்பாக, விஜய் ‘Sorry வேண்டாம் நீதி வேண்டும்’ என்ற வாசகம் பொறித்த பதாகையை ஏந்தி இருக்கிறார். மேலும், தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறை நடவடிக்கைக்கு எதிராகவும் தவெகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல, ‘சாரிமா மாடல் சர்க்கார்’ என விஜய் சாடியுள்ளார். மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், ” திருபுவனம் அஜித் குமாரின் குடும்பத்திடம் கேட்டது போல் மீதமுள்ள 23 குடும்பத்திடம் மன்னிப்பு கேட்பதோடு, நிதியுதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், ” முதல்வர் மு.க. ஸ்டாலின் சார் இந்த ஆட்சியில் 24 லாக்கப் மரணம் நடந்திருக்கிறது. Sorry கேட்பது ஒன்னும் உங்களுக்கு புதுசு இல்லையே, அந்த 24 பேரின் குடும்பத்தினரிடமும் நீங்கள் sorry கேட்க வேண்டும். அஜித்குமாருக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தொகை இந்த 24 குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
“அண்ணா பல்கலை மாணவி வழக்கு தொடங்கி அஜித்குமார் வழக்கு வரை எல்லாதுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு? உங்க ஆட்சி எதுக்கு? CM பதவி எதுக்கு சார்? CBI RSS , BJP-ன் கைபாவையாக தான் இருக்கு, நீங்க ஏன் அவங்க பின்னாடி ஏன் ஒழிஞ்சிக்கறிங்க?
அஜித் குடும்பத்திடம் முதலமைச்சர் சாரி சொன்னது தப்பில்லை. தி.மு.க ஆட்சியில் காவல் மரணங்களில் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சர் ஏன் சாரி சொல்லவில்லை? தயவுசெய்து சாரி சொல்லிடுங்க முதலமைச்சர் ஸ்டாலின் சார். அஜித் குடும்பத்துக்கு கொடுத்த மாதிரி இந்த 24 பேரின் குடும்பங்களுக்கும் நிதி குடுத்துருங்க முதலமைச்சர் ஸ்டாலின் சார்” என்று கடுமையாக சாடினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!
July 13, 2025