, ,

பள்ளி இறுதித்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு -அமைச்சர் அன்பில் மகேஷ்..!

By

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை எனவும் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இறுதி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அப்போது இந்த தகவலை தெரிவித்தார்.

மேலும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு நிச்சயமாக நடைபெறும். வதந்திகளை நம்ப வேண்டாம். பள்ளி இறுதித்தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும் என கூறினார்.

Dinasuvadu Media @2023