சசிகலா வருகையை கொண்டாடும் விதமாகவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு சசிகலாவை வீட்டிற்கு அழைத்து செல்வோம் என டிடிவு தினகரன் என தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் சசிகலாவை பார்க்க விக்டோரியா மருத்துவமனைக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது, அமமுக – அதிமுக இணையுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஜெயலலிதா நினைவிடத் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை பார்க்கும்போது சசிகலா விடுதலையை கொண்டாடுவது போல்தெரிகிறது. மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சசிகலாவை அழைத்துச் செல்வோம், அதிமுகவை மீட்டெடுத்து உண்மையான அம்மா ஆட்சியை கொடுப்போம் என டிடிவு தினகரன் என தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…