கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைக்கான திறப்பு விழா – ஆளுநருக்கு அழைப்பு

கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைக்கான திறப்பு விழா அழைப்பிதழை ஆளுநர் ரவியை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி. கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைக்கான திறப்பு விழா அழைப்பிதழை ஆளுநர் ரவியை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025