Case registered against AIADMK General Secretary EPS [Image Source- PTI]
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரா எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக இபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்து தொடர்பாக விரிவான விசரணை நடத்த சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக இபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சேலம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், காவல்துறையின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயார்நீதிமன்றம். விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்யும் வரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது வேட்புமனு மற்றும் பிராமண பத்திரத்தில் சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை தவறாக தெரிவித்ததாக தேனியை சேர்ந்தவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து இபிஎஸ் முறையிட்டிருந்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரா எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…