மீண்டும் மீண்டும் கனமழை.! தமிழகத்திற்கு ‘ஆரஞ்ச்’ அலர்ட்.!

தமிழகத்தில் கடந்த மாத முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணாமாக இன்னும் சில நாட்கள் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையில் மிதிலி புயல் வெங்கடலில் உருவாகி அது ஒடிசா, வங்கதேசம் நோக்கி நகர்ந்து தமிழகத்திற்கு கனமழையை கொடுத்தது. அடுத்து தற்போது இன்னொரு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம்..!
அதாவது, குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகத்திற்கு வரும் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய கூடும் என்றும் இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக கேரளாவிலும் கனமழை பெய்ய கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025